இந்தியா

தனியார் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் சம்மேளனம் சார்பில் தர்ணா நடந்தது.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த தர்ணாவிற்கு சம்மேளன தலைவர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏசுமுத்து முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகன் தர்ணாவை துவக்கி வைத்து பேசினார்.சம்மேளன நிர்வாகிகள் ராஜன், சங்கீதா, கிறிஸ்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. வரும் 14 ம்தேதி வரை தொடர் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X