இந்தியா

கோவில் இடத்தில் கடை: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : கோவில் இடத்தில் தனியார் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

குயவர்பாளையம், லெனின் வீதியில் செல்வவிநாயகர் ஜெயங்கொண்ட மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு எதிரே மேட்டுத் தெருவில் தேர் சகடைகள் நிறுத்தப்பட்டுள்ள ஷெட்டில் நேற்று தனியார் கடை திறப்பு விழா நடந்தது.இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் தலைமையில் கடையை முற்றுகையிட்டனர். தகவலறிந்த உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சஜீத், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது ஓம்சக்தி சேகர், கோவில் வளாகத்தில் 30 ஆண்டாக செயல்பட்டு வந்த மரக்கடைசல் கூடத்தை அகற்றிவிட்டு தற்போது தேர் சகடை விடப்பட்டு வருகிறது. கோவில் அறங்காவலர் குழுவின் பதவிகாலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் எப்படி கடை ஒதுக்கப்பட்டது. அது எப்படி செல்லும் என கேள்வி எழுப்பினார்.அதனைத் தொடர்ந்து இந்து அறநிலைய ஆணையரிடம் பேசி தீர்வு காணலாம் என போலீசார் கூறினர். அதனையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பின்னர் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆணையர் சச்சிதானந்தம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.அதில் ஓம்சக்தி சேகர் தலைமையில் பொதுமக்களும், கோவில் இடத்தில் கடை திறந்தவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கோவில் இடத்தை தனியாருக்கு வாடகைக்கு விடாமல், போதிய இடம் இல்லாமல் இருக்கும் அங்கன்வாடிக்கு ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனை கேட்ட ஆணையர், இதுகுறித்து கோவில் ஆவணங்களை ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அது வரைக்கும் கோவில் கடையை திறக்கக்கூடாது என அறிவித்தார்.அதனையேற்று இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X