இந்தியா

ஆரோவில்லில் 7 நாட்கள் நாடகத்திருவிழா டில்லி தேசிய நாடகப்பள்ளி ஏற்பாடு

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : ஆரோவில்லில், டில்லி தேசிய நாடகப்பள்ளி சார்பில், 21 வது பாரத் ரங் மகோத்சவின் நாடக திருவிழா, நாளை (12ம் தேதி) துவங்கி ஒருவாரம் நடக்கிறது.

இதுகுறித்து டில்லி தேசிய நாடகப்பள்ளி டீன் அபிலாஷ்பிள்ளை, புதுச்சேரி பல்கலைக்கழக நாடகவியல் துறை முன்னாள் பேராசிரியர் ராஜூ ஆகியோர் கூறியது:உலக நாடுகளின் தலை சிறந்த நாடக பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும், தேசிய நாடகப்பள்ளி 1959ம் ஆண்டு துவக்கப்பட்டது. மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சங்கீத நாடக அகாடமி வழிகாட்டுதலில் இயங்கும் இப்பள்ளி நாடகத்துறையில் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கிறது.தேசிய நாடகப்பள்ளி சார்பில் 21வது பாரத் ரங் மகோத்சவ் இணை நாடகத் திருவிழாவை தமிழகம் நடத்த உள்ளது. பிப்.,12ம் தேதி தொடங்கி 18 வரையில் ஏழு நாட்களுக்கு இத்திருவிழா நடத்தப்படுகிறது.புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் அமைந்துள்ள ஆதிசக்தி அரங்கத்தில் பிப்., 12ம் தேதி மாலை 6:30 மணியளவில் துவங்குகிறது. புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனிகுமார் துவக்கி வைக்கிறார். தேசிய நாடகப்பள்ளி தலைவர் அர்ஜீன் தியோ சரண், நடிகர் நாசர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.ஏழு நாட்கள் நடத்தப்படும் நாடகம், நாடக ஆர்வலர்களுக்கு உன்னதமான அனுபவத்தை கொடுக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாடக குழுக்களின் பல்வேறு நாடகங்கள் இடம் பெறுகிறது. ஆரோவில்லில் தொடர்ந்து நடைபெறும் இந்த நாடக திருவிழா, 13ம் தேதி மட்டும், ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள இண்டியனோஸ்ரம் தியேட்டரில் நடக்கிறது.தரமான நாடகங்ளை மக்கள் பார்வைக்கு தொடர்ந்து மேடையற்றுவதோடு, நாடக துறையின் வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X