அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 11, 2020
Share


தூக்கம் அவசியம்
ஒவ்வொருவருக்கும் தூக்கம் மிக அவசியம். இந்நிலையில் பிரிட்டனில் உள்ள வார்விக் பல்கலை 9 முதல் 11 வயதுக்குட்பட்ட 11 ஆயிரம் மாணவர்களிடம் அவர்களின் மூளை கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதனை அவர்களது தூங்கும் நேரத்துடன் ஒப்பீடு செய்தனர். இதில் தூங்கும் நேரத்தின் அளவு குறைவாக உள்ள மாணவர்களுக்கு மன அழுத்தம், பதட்டம், சோர்வு, மனக்கிளர்ச்சி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என கண்டறியப்பட்டது. 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9 முதல் 12 மணிநேரம் தூங்க வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தகவல் சுரங்கம்
45 நிமிட அதிபர்

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் 34வது அதிபராக இருந்தவர் பெட்ரோ லாஸ்குரெய்ன். இவர் 1913 பிப்.19ல் அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் வெறும் 45 நிமிடங்களில் தனது பதவியிலிருந்து விலகினார். இவர் தான் உலகில் மிக குறுகிய காலத்தில் அதிபராக இருந்தவர். 1856 மே 8 ல் பிறந்த இவர், இரண்டு முறை அந்நாட்டின் வெளிநாட்டின் வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்துள்ளார். 1910ம் ஆண்டில் மெக்சிகோ சிட்டி நகர மேயராக பணியாற்றினார். 1952 ஜூலை 21ல் மறைந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X