இந்தியா

அமைச்சக உதவியாளர் பணி விவகாரம் கோகுலகிருஷ்ணன் எம்.பி., கடிதம்

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : நேரடி போட்டி தேர்வு மூலம் அமைச்சக உதவியாளர் பணி வழங்கும் நியமன விதியை திருத்தம் செய்ய வேண்டும் என கோகுலகிருஷ்ணன் எம்.பி. முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதத்தில்; அமைச்சக பதவிகளான எல்.டி.சி., யு.டி.சி., அமைச்சக உதவியாளர், கண்காணிப்பாளர் என்ற கட்டமைப்பில் ஒவ்வொரு பதவியிலும் குறிப்பாக எல்.டி.சி.யில் 8 ஆண்டுகள் மற்றும் யு.டி.சி.யில் 10 ஆண்டுகள் நன்கு வேலை திறன் மற்றும் அனுபவம் பெற்ற பின்பே உயர் பதவியான அமைச்சக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் பதவி உயர்வுகளை பெறுவதற்கான நடைமுறை இருந்து வருகிறது.

ஆனால் ஒவ்வொரு பதவியிலும், கற்கும் அனுபவங்களை நேரடி நியமனம் மற்றும் போட்டித்தேர்வு என்ற பெயரில் முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது. இதன் மூலம் 18 ஆண்டுகள் அலுவலகத்தில் கற்க வேண்டிய செயல் அறிவினை கற்காமல் இந்த நிர்வாகத்திற்கு சீர்கேட்டை உருவாக்கியுள்ளனர்.இத்தகைய செயல், நமது நிர்வாகத்தின் செயல்திறனை முற்றிலுமாக பாழ்படுத்திவிடும். மேலும் அமைச்சக உதவியாளர் நியமன விதியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது புதுச்சேரி இளைஞர்களின் வேலை வாய்ப்பை கடுமையாக பாதிக்கும்.அதனால் அமைச்சக உதவியாளர் நியமன விதியை உடனடியாக உரிய திருத்தம் செய்து, தற்போது நடைமுறையில் உள்ள 100 சதவீதம், பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.நியமன விதியை திருத்தம் செய்து மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X