இந்தியா

விளையாட்டு போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : பிப் 11, 2020
Advertisement

நெட்டப்பாக்கம் : குழந்தைகள் திருவிழாவில் வெற்றி பெற்ற கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

ரெட்டியார்பாளையம் போப் ஜான்பால் கல்லுாரியில், தேஷ்னா அறக்கட்டளை சார்பில், குழந்தைகள் திருவிழா 2020 நடந்தது. இத்திருவிழாவில், புதுச்சேரியில் இருந்து பத்து அரசு பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி துணை முதல்வர் முல்லைவாணன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவித்து ஊக்கப்படுத்தினார். ஆசிரியர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் அருள்பிரகாஷ், ஜெயந்தி, தனுசு, ஜபீன், ராஜேஷ், உமாமகேஸ்வரி, ஜெயபிரேம் ராஜ், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் தரணிதரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X