இந்தியா

சாவடி குளம் துார்வாரப்படுமா?

Added : பிப் 11, 2020
Advertisement

பாகூர் : கிருமாம்பாக்கத்தில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ள சாவடிக் குளத்தை துார்வாரி முறையாக பராமரித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கத்தில் நுழைவு வாயில் அருகே சாவடிக்குளம் உள்ளது. இந்த குளம் கடந்த 2011ம் ஆண்டு 60 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது.அதன்பின் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டது. இதனால், குளத்தில் மீண்டும் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமிக்க துவங்கியது. இதனையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கிருமாம்பாக்கம் போலீசார், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் பங்களிப்புடன், சாவடி குளத்தில் இருந்த குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.

அதன்பின்னும், சாவடிக்குளம் முறையாக பராமறிக்கப்படாமல் விடப்பட்டது. இதனால், மீண்டும் குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர ஆரம்பித்து, தற்போது குளம் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மேலும், குளத்தில் கழிவு நீர் கலப்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, கிருமாம்பாக்கம் சாவடி குளத்தை துார்வாரி முறையாக பராமரித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X