இந்தியா

வாதானுார் அரசு பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம்

Added : பிப் 11, 2020
Advertisement

திருக்கனுார்: மண்ணாடிபட்டு சமுதாய நலவழி மையம் சார்பில் வாதானுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் நேற்று நடந்தது. நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி அருள்விசாகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் வீரையன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் இளையதாசன், குடற்புழு நீக்கம் குறித்தும், குடற்புழுவால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரையின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

சுகாதார உதவி ஆய்வாளர் பெருமாள், மாத்திரை உட்கொள்ளும் முறைகள் பற்றி கூறினார். மகப்பேறு உதவி செவிலியர் பொற்கிலை, கை கழுவும் முறை பற்றி செயல்முறை விளக்கம் அளித்தார்.பள்ளி தலைமையாசிரியை சிவகாமி குடற்புழு நீக்க மாத்திரையை மாணவர்களுக்கு வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும், வகுப்பாசிரியர்கள் மூலம் மாத்திரைகள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் மகப்பேறு உதவி செவிலியர் தீபா செய்திருந்தனர், மகப்பேறு உதவி செவிலியர் மீனா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X