இந்தியா

குடும்ப பிரச்னையில் பெயின்டர் தற்கொலை

Added : பிப் 11, 2020
Share
Advertisement

புதுச்சேரி : குடும்ப பிரச்னையில் விரக்தியடைந்த பெயின்டர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியக்காலாப்பட்டு, செல்லியம்மன் நகர் ராகுல் காந்திவீதியை சேர்ந்தவர் தனபால், 44; பெயிண்டர். இவரது மனைவி காமாட்சி, 40. சாசன் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அரவிந்த்,18; அன்புசெல்வம்,17; இரு மகன்கள் உள்ளனர்.குடிபோதைக்கு அடிமையான தனபால் கடந்த 9ம் தேதி காலை குடித்துவிட்டு மனைவி மற்றும் மகன்களிடம் தகராறு செய்தார். பின்னர் அனைவரையும் வீட்டை விட்டு விரட்டினார். இதனால், காமாட்சி தனது மகன்களுடன், அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று (10 ம்தேதி) காலை 6.30 மணியளவில் மூத்த மகன் அரவிந்த், தந்தையை பார்க்க வீட்டிற்கு சென்றபோது, அங்கு அவர் துாக்கில் பிணமாக தொங்கினார்.தகவலறிந்த காலாப்பட்டு போலீசார் விரைந்து சென்று, தனபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்/கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X