மா மரங்கள் பூத்துக் குலுங்குது விவசாயிகள் மனம் பதைக்குது| Dinamalar

தமிழ்நாடு

மா மரங்கள் பூத்துக் குலுங்குது விவசாயிகள் மனம் பதைக்குது

Added : பிப் 11, 2020
Share
பேரையூர் :பேரையூர் தாலுகாவில் சாப்டூர், பழையூர், அணைக்கரைப்பட்டி, வண்டாரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்தாண்டு பெய்த மழையால் மா மரங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.இவை ஈரம்பட்டு காய்களாக மாறும். இல்லாவிட்டால் வெப்பத்தால் பூக்கள் கருகி உதிர்ந்துவிடும். எனவே மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இங்கு மகசூலாகும் மாங்காய்கள் மதுரை, தேனி, கேரளா உட்பட

பேரையூர் :பேரையூர் தாலுகாவில் சாப்டூர், பழையூர், அணைக்கரைப்பட்டி, வண்டாரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்தாண்டு பெய்த மழையால் மா மரங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.இவை ஈரம்பட்டு காய்களாக மாறும். இல்லாவிட்டால் வெப்பத்தால் பூக்கள் கருகி உதிர்ந்துவிடும். எனவே மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இங்கு மகசூலாகும் மாங்காய்கள் மதுரை, தேனி, கேரளா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. எவ்வளவுதான் தண்ணீர் பாய்ச்சினாலும் மழை பெய்தால்தான் பூக்கள் உருவாகின்றன.அதேபோல பூத்த பூக்களும் மழைபெய்தால்தான் காய்களாகின்றன. இந்த இரண்டிற்கும் நடுவே சில நாட்கள் வெயிலும் வேண்டும். அந்தந்த நேரத்தில் மழை, வெயில் சரியாக இருந்தால்தான் மகசூல் முழுமையாக தரும்.விவசாயிகள் கூறுகையில், ''கடந்தாண்டு விலை இருந்தது விளைச்சல் இல்லை. இந்தாண்டு அதிகமான பூக்கள் பூத்திருக்கின்றன. ஒருவாரத்திற்குள் லேசான மழை பெய்யாவிட்டால் ஒரு மரத்திற்கு 20 காய்களுக்கு மேல் எதிர்பார்க்க முடியாது. மகசூல் கிடைக்காவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X