இந்தியா

காரைக்காலை வேளாண் மண்டலமாக அறிவிக்க அரசுக்கு கோரிக்கை

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : காரைக்கால், பாகூரை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வையாபுரிமணிகண்டன், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு, விவசாயிகள் நலனுக்காக எண்ணற்ற சாதனைகளை செய்து வருகிறது.தற்போது, காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றி சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கமாட்டோம் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அதற்கான சிறப்புச் சட்டம் இயற்ற தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த சிறப்பு சட்டத்தால் வேளாண்மைக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படும் எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது. விவசாயமும், அதனை சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்க முடியும். விளைநிலங்கள் பாதுகாக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வரை புதுச்சேரி மாநில அ.தி.மு.க., வரவேற்கிறது.தமிழக அரசைப் போல புதுச்சேரி ஆளும் காங்., அரசும், புதுச்சேரி மாநில விவசாயிகளின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன், ஓ.என்.ஜி.சி., போன்ற திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்கக்கூடாது.இதற்காக காரைக்கால் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் நெற்களஞ்சியமான பாகூரையும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். வரும் 12ம் தேதி கூட்டப்படும் சட்டசபையில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X