இந்தியா

குழந்தைகளின் பாரம்பரிய விளையாட்டு விழா புதுச்சேரியில் உற்சாக கொண்டாட்டம்

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் வீதியில் குழந்தைகளின் பாரம்பரிய விளையாட்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியின் நீர் நிலைகளை பாதுகாத்தல், பாரம்பரிய கலாசாரம், மரபுகள், உணவு வகைகள், இயற்கை வளங்கள், கலைகள் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற அடையாளங்களைப் போற்றுதல், பாதுகாத்தல் மற்றும் வளர்த்தல் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு, புதுச்சேரி பாரம்பரியத் திருவிழா ஜன., 25ம் தேதி துவங்கி, நாளை (பிப்., 12ம் தேதி) வரை கொண்டாடப்படுகிறது.அந்த வகையில், நேற்று காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டு விழா நடத்தப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான, ' கொலகொலயா முந்திரிக்கா', 'கண்ணாம்மூச்சி', ஒரு குடம் தண்ணி ஊத்தி, தாயம், பச்சக்குதிரை தாண்டுதல், கோ கோ, உப்பு மூட்டை துாக்குதல், கபடி, பல்லாங்குழி, பம்பரம், கோலி குண்டு, கயிறு இழுத்தல் மற்றும் பாண்டி ஆட்டம் ஆகியவற்றை குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். அவர்களுடன் இளைஞர்களும், பெரியவர்களும் இணைந்து விளையாடினர்.

நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற வீதி விளையாட்டு நிகழ்வை ஆனந்தி, விஜயகணபதி ஒருங்கிணைத்து நடத்தினர்.விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும், பாரம்பரிய உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.விளையாட்டு விழாவை முன்னிட்டு வீதி முழுவதும் சுத்தம் செய்து, தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டது. கழிப்பிட வசதி, முதலுதவிக்கு மருத்துவ குழு வசதி செய்யப்பட்டது.விழா ஏற்பாடுகளை வீதி மக்களுடன் இணைந்து இன்டேக் அமைப்பினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X