புகார் பெட்டி 

Added : பிப் 11, 2020
Advertisement

புதர்களை அகற்ற நடவடிக்கை தேவை

முதலியார்பேட்டை, பிராமணர் வீதி முதல் குறுக்கு தெருவில் காலிமனையில் புதர் மண்டி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

காஞ்சனா, முதலியார்பேட்டை.

தண்ணீர் பற்றாக்குறை
புதுச்சேரி கிருஷ்ணா நகர் 9-வது குறுக்கு தெருவில் குறைந்த அழுத்தத்தில் வீடுகளுக்கு தண்ணீர் வருகிறது.

பாண்டுரங்கன், புதுச்சேரி.

கழிவு நீர் சாலையில் ஓடும் அவலம்

புதுச்சேரி துாய இருதய ஆண்டவர் கோவில் பின்புறம் உள்ள கரோன் வீதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.

தனலட்சுமி, புதுச்சேரி.

தொங்கும் கேபிள்களால் விபத்து அபாயம்

குயவர்பாளையம் சிவ சுப்ரமணிய கோவில் தெருவில் அறுந்து கிடக்கும் கேபிள்களால் விபத்து அபாயம் உள்ளது.

சுந்தரி, குயவர்பாளையம்.

வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் எச்சரிக்கை செய்ய வெள்ளை வண்ணம் பூசாததால் விபத்து அபாயம் உள்ளது.

சிவ அசோக்ராஜ், பிள்ளைச்சாவடி

லாஸ்பேட்டை புதுப்பேட்டை கோலக்கார நாயக்கர் அரசு துவக்க பள்ளியில் எதிரே உள்ள வேகத்தடையில் எச்சரிக்கை வண்ணம் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. வேலு, லாஸ்பேட்டை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X