பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒரே கட்டண முறை: அமல்படுத்த மக்கள் கோரிக்கை

Added : பிப் 11, 2020
Advertisement


உள்ளகரம்- - புழுதிவாக்கம் பாதாள சாக்கடை இணைப்பில், பொதுமக்களை பாதிக்கும் கூடுதல் கட்டணங்களை நீக்கி, ஒரே கட்டண முறை அமல்படுத்த வேண்டும் என, தென்சென்னை புறநகர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, வேண்டுகோள் விடுத்துள்ளது.
உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சி, 2009ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது, பெருங்குடி மண்டலத்தில் இந்த பகுதி வருகிறது. அங்கு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 2011ல் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான பணிகள் துவங்கின. ஆமைவேகத்தில் நடந்து வந்த அப்பணிகள், கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றன.இல்லந்தோறும் இணைப்புதற்போது இணைப்பு வழங்கும் பணி நடந்துவருகிறது. 2019ம் ஆண்டு இறுதிவரை, புதிய கழிவு நீர் இணைப்பிற்கு கட்டணமாக, ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டது.இதனிடையே, பாதாள சாக்கடை இணைப்பை எளிமைப்படுத்தும் வகையில், 'அழைத்தால் இணைப்பு' மற்றும் 'இல்லந்தோறும் இணைப்பு' என்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த புதிய திட்டங்களின் கீழ், கழிவு நீர் இணைப்பு கட்டண அளவீடுகள் முறையில், பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், இணைப்பு பெறுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், பெரும்பாலானோர் இணைப்பு கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில், கட்டண உயர்வு குறித்து, தென்சென்னை புறநகர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு:சென்னை குடிநீர் வாரியம், உள்கட்டமைப்பு அபிவிருத்திக் கட்டணம் என்ற முறையில், இரண்டு தளத்திற்கு மேல் உள்ள கட்டடங்களில் சதுர அடிக்கு, 16.50 ரூபாய் என வசூலிக்கிறது. இணைப்பிற்கு ஒரு குடியிருப்புக்கு, 7,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது இல்லாமல் புதிய கழிவு நீர் இணைப்புக் கட்டண நடைமுறையின் கீழ், மேன் ஹோலில் இருந்து, 1 மீட்டர் துாரம் குழாய் பதிப்பிற்கான தனிகட்டணமாக, 4,084 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.ஒரே கட்டணம் முறைஇதன்படி, 5 மீட்டர் தொலைவிற்கு, 20 ஆயிரம் ரூபாயும், 25 மீட்டர் தொலைவிற்கு, 1 லட்சம் ரூபாய்க்கு மேலும், மாறுபட்ட கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.இரண்டு தளம் உள்ள கட்டடங்களுக்கு மட்டுமே, புதிய திட்டங்கள் பொருந்தும். இந்த கட்டண முறையால், கழிவு நீர் இணைப்பு பெற, பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.எனவே, பொதுமக்களை பாதிக்கும் கூடுதல் கட்டணங்களை நீக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கு, ஒரே கட்டணம் முறை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X