ஆவடியில் கீழடி தமிழர் திருநாள் விழா| Dinamalar

ஆவடியில் கீழடி தமிழர் திருநாள் விழா

Added : பிப் 11, 2020
ஆவடி:ஆவடியில், மத்திய அரசின் போர் ஊர்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பணியாளர்கள், கீழடி விழிப்புணர்வுடன், தமிழர் திருநாள் விழா கொண்டாடினர். இதனை, மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். விழாவில், கவிஞர் கவிபாஸ்கர் எழுதிய கவிதைகள் அடங்கிய, கீழடி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. பணியாளர்கள் பொங்கல் வைத்து
 ஆவடியில் கீழடி தமிழர் திருநாள் விழா

ஆவடி:ஆவடியில், மத்திய அரசின் போர் ஊர்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பணியாளர்கள், கீழடி விழிப்புணர்வுடன், தமிழர் திருநாள் விழா கொண்டாடினர்.


இதனை, மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். விழாவில், கவிஞர் கவிபாஸ்கர் எழுதிய கவிதைகள் அடங்கிய, கீழடி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. பணியாளர்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.பின், உரியடித்தல், கயிறு இழுத்தல், கில்லி உள்ளிட்ட போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, அசத்தினர். தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்துார் கோடாங்கி மற்றும் வெண்மணி கிராமிய கலைக்குழு சார்பில், மக்களிசை கச்சேரி நடந்தது. மேலும், பணியாளர்களும், அவர்களது குழந்தைகளும், மேடையில் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X