லோக்சபாவில் பதாகை எடுத்து வரலாமா:விவாதிக்க ஓம் பிர்லா முடிவு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (9)
Advertisement
லோக்சபா, பதாகை ,விவாதம்,# ஓம் பிர்லா முடிவு#

புதுடில்லி:“லோக்சபாவில்,பதாகைகளை எடுத்து வர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்ய, விவாதம் நடத்த வேண்டும்,” என, சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.
பார்லிமென்டில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. லோக்சபாவில் நேற்று திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய், 2020ம் ஆண்டிற்கான, ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மசோதா குறித்து பேசினார். அப்போது எழுந்து நின்று அமளியில் ஈடுபட்ட, பா.ஜ., - எம்.பி.,க்கள், கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.




அதில்,'மேற்கு வங்கத்தில், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது பேசிய சவுகதா ராய், அமளியில் ஈடுபடுவோரை அமைதியாக இருக்க உத்தரவிடுமாறு, சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர், “சபைக்குள் பதாகைகளை கொண்டுவர அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய, விவாதம் நடத்த வேண்டும். அதில், அனுமதி மறுக்கப்பட்டால், மீறி எடுத்துவரும் எம்.பி.,க்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, காங்., - எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடமும் கேட்டுக்கொண்டார்.அவர், “இந்த விவகாரத்தில், ஒருமித்த கருத்து இல்லை,” என்றார்.
இதற்கிடையே, கேள்வி நேரத்தின் போது பேசிய திரிணமுல் காங்., - எம்.பி., மஹூவா மொய்த்ரா, நாட்டின் வளர்ச்சி விகிதம் குறித்த கேள்வியை கேட்க முற்பட்டார். அதற்கு ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால், கோபமடைந்த மொய்த்ரா, சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறினார். இதையடுத்து பேசிய சபாநாயகர், “மரியாதைக்குரிய உறுப்பினரே. இது போன்ற தேவையற்ற வார்த்தைகளை இனிமேல் உபயோகிக்க வேண்டாம். நான் பாரபட்சம் காட்டுகிறேனா இல்லையா என்பதை இந்த சபை முடிவு செய்யும்,” என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
11-பிப்-202022:16:07 IST Report Abuse
Aarkay பதாகைகளை அனுமதிக்க வேண்டாம் ஏற்கெனவே சந்தைக்கடை போலிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
11-பிப்-202018:02:05 IST Report Abuse
vnatarajan பாலிமெண்ட்டில் உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று தற்போதைய சட்டம் என்ன சொல்கிறது. என்பதை சபாநாயகர் எடுத்து கூறலாமே. பதாகைகளை ஊர்வலம் செல்லும்போதுதான் எந்தவேண்டும் பார்லிமெண்டில் எந்தக்கூடாது. மீறினால் முதலில் வார்ன் பண்ணுங்கள். பிறகு வெளியே அனுப்புங்கள். அன்று அந்த உறுப்பினருக்கு சம்பளம் பாட்டா கான்டீன் டிக்கெட் என்று எல்லாவற்றையும் கான்செல் செய்யுங்கள். TV யில் பாபார்லிமெண்டு பட்ஜெட் கூட்ட தொடரை பார்த்தல் பல சீட்டுகள் காலியாக இருக்கிறது. ஆனால் இவர்கள் சம்பளம் .பாட்டா கான்டீன் வசதி மேலும் 5 வருடம் கழித்தால் பென்சன் என்று எல்லா வசதிகளையும் மக்கள் வரிப்பணத்தில் அனுபவிக்கிறார்கள். இவார்களெல்லாம் கூட்டம் நடக்கும்போது எங்கே செல்கிறார்கள் என்று ஒவ்வொரு ஆப்சென்ட் MP யம் மீடியா மூலமாகவோ கூட்டத்தொடரிலோ சபாநாயகருக்கு எழுத்துமூலமோ தெரிவிக்கவேண்டும் மக்களுக்கும் அது தெரிவிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
பாலசுப்பிரமணியன் அ நமது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒழுங்கு செய்யும் நடவடிக்கைகளை உடனே எடுத்து செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மன்றத்தில் நிகழ்வுகளை நோக்கினால் சில சமயங்களில் நாம் காண்பது நமது பாராளுமன்றமா என சந்தேகம் எழுகிறது. எதிர் கட்சி அங்கத்தினர்கள் சிலர் தங்கள் இருக்கையிலிருந்து மன்றத்தின் மத்திய பகுதியில் வந்து கோஷமிடுவது வழக்கமாகிவிட்டது. மக்கள் தங்கள் வரிப்பணம் சிலவு செய்து அங்கத்தினர்களை தேர்ந்தெடுத்து அனுப்புவது நல்ல முறையில் விவாதிப்பதற்காகவே தவிர வெறும் கூச்சல் போடுவதற்கல்ல. இவற்றை ஒழுங்கு படுத்துவதற்கு அவைத்தலைவர் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் மக்கள் ஆதரிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X