இந்தியா

தயார்! கோடையை சமாளிக்க மின்துறை... கூடுதல் மின்சாரம் பெற தீவிரம்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020
Advertisement
தயார்! கோடையை சமாளிக்க மின்துறை... கூடுதல் மின்சாரம் பெற தீவிரம்

புதுச்சேரி:கோடைக்காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில், மின்சார பற்றாக்குறை ஏற்படாமல், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைளை, மின்துறை முடுக்கி விட்டுள்ளது.
மழை மற்றும் குளிர் காலங்களின்போது, மின் உபயோகம் குறைவாக இருக்கும். அதேசமயம், கோடைக் காலத்தில் 'ஏசி' மற்றும் மின் விசிறிகள் பயன்பாடு அதிகரிப்பதால், மின் தேவையும் உச்சத்தை தொடுவது வழக்கம்.புதுச்சேரியை பொறுத்தவரை, குளிர் காலங்களில் தினசரி 310ல் இருந்து, 370 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. கோடைக் காலம் பிறந்து விட்டால், தினசரி மின் தேவை 430 மெகாவாட்டில் இருந்து 450 மெகாவாட் அளவுக்கு அதிகரித்து விடும்.நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி., நிறுவனத்திடம் இருந்தும், ராமகுண்டம், சிம்ஹாத்ரி, தால்சர், வல்லுார், துாத்துக்குடி போன்ற இடங்களில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்களில் இருந்தும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேவையான மின்சாரம் பெறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், கல்பாக்கம், கைகா, கூடங்குளம் போன்ற இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களிலும் இருந்தும் புதுச்சேரிக்கான மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தற்போது, சராசரியாக 390 மெகாவாட் மின்சாரம் புதுச்சேரிக்கு வந்து கொண்டுள்ளது. கோடைக்காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில் புதுச்சேரிக்கு தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்குமா, மின் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின்துறை கண்காணிப்புப் பொறியாளர்-1 முரளியிடம் கேட்டபோது, 'புதுச்சேரிக்கு தேவையான மின்சாரம் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படுகிறது. மின்சார பற்றாக்குறை எதுவும் கிடையாது. தற்போது, சராசரியாக 390 மெகாவாட் மின்சாரம் தினசரி வருகிறது. கடந்த 4ம் தேதியன்று, அதிகபட்சமாக 450 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டது. நெய்வேலியில் உள்ள புதிய அனல்மின் திட்டத்தில் இருந்து 28 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.

தற்போதுள்ள ஒதுக்கீடு அல்லாமல், கூடுதலாக 40 மெகாவாட் மின்சாரத்தை, வரும் மார்ச் மாதம் வரை மத்திய அரசு நமக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரி அரசு கேட்டுக் கொண்டால் மார்ச் மாதத்தை தாண்டியும் கூடுதல் மின்சாரம் நமக்கு தொடர்ந்து கிடைக்கும்.புதுச்சேரியின் தேவையைவிட கூடுதலாக மின்சாரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதால், கோடைக் காலத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இருக்காது. மேலும், தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மின்துறை எடுத்து வருகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X