தேசிய, 'டி20' கிரிக்கெட் ஜெ.பி.ஏ.எஸ்., அபாரம்

Added : பிப் 11, 2020
Advertisement
 தேசிய, 'டி20' கிரிக்கெட் ஜெ.பி.ஏ.எஸ்., அபாரம்

சென்னை:தேசிய அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி-20' கிரிக்கெட் காலிறுதி போட்டியில், ஜெ.பி.ஏ.எஸ்., கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
தேசிய அளவில், கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி- 20' கிரிக்கெட் போட்டி, 6ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த, ஆண்கள் பிரிவில், -20; பெண்கள் பிரிவில், - 12 கல்லுாரிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் குருநானக் கல்லுாரியில் நடந்த, பெண்கள் பிரிவில், முதல் காலிறுதி போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி மற்றும் பாரதி பெண்கள் கல்லுாரி அணிகள் மோதின.இந்த போட்டியில், 'டாஸ்' வென்ற, எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி, பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட, 20 ஓவர்களில், 1 விக்கெட்டை மட்டுமே இழந்து, 183 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களம் கண்ட, பாரதி கல்லுாரி அணி, 6 விக்கெட் இழப்பிற்கு, 72 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. மற்றொரு காலிறுதி போட்டியில், ஜெ.பி.ஏ.எஸ்., மற்றும் விவேகானந்தா பொறியியல் கல்லுாரி அணிகள் மோதின. இதில், 'டாஸ்' வென்ற, ஜெ.பி.ஏ.எஸ்., அணி, 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, 141 ரன்களை எடுத்தது.அடுத்து பேட் செய்த, விவேகானந்தா அணி, 18.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 48 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், 53 பந்துகளில், 55 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு காரணமான ஐஸ்வர்யா, 'சிறந்த வீராங்கனை'யாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X