பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் பள்ளிக்கு போகலாம்! சுவர் ஓவியம் வரைந்த முன்னாள் மாணவர்கள்

Added : பிப் 11, 2020
Advertisement
 மீண்டும் பள்ளிக்கு போகலாம்!  சுவர் ஓவியம் வரைந்த முன்னாள் மாணவர்கள்

குரோம்பேட்டை;குரோம்பேட்டையில், முன்னாள் மாணவர்கள் இணைந்து, தாங்கள் படித்த பள்ளி சுற்றுச்சுவரில், விழிப்புணர்வு ஓவியம் வரைந்து, அசத்தியுள்ளனர்.
குரோம்பேட்டை, நேரு நகரில், அய்யாசாமி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள்.இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து, 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, முன்னாள் ஆசிரியர்களுக்கு, பாராட்டு விழா நடத்தினர். தொடர்ந்து, மாணவர்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, பள்ளி சுற்றுச்சுவரில், அரசியல் கட்சிகள் மற்றும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவதை தடுக்கும் விதமாக, ஓவியம் வரைந்து, அழகாக மாற்ற முடிவு செய்தனர்.
தங்கள் சொந்த செலவில், அதற்கான வர்ணங்களை வாங்கி, பள்ளியில் படிக்கும் ஏழு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை கொண்டு, சுவர் முழுவதும், ஓவியங்களை வரைந்துள்ளனர். அதில், பெண் பாதுகாப்பு, மரம் வளர்த்தல், விவசாயம் காப்போம், நீரின் அவசியம் போன்ற ஓவியங்கள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படித்த பள்ளியை மறக்காமல், அந்த பள்ளியின் வளர்ச்சிக்காக உதவி செய்யும் முன்னாள் மாணவர்களை, பகுதி மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X