வடிகாலில் மின் ஒயர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடிகாலில் மின் ஒயர்

Added : பிப் 11, 2020
Share
 வடிகாலில் மின் ஒயர்

எண்ணுார்:மழை நீர் வடிகாலில், மின் ஒயர்கள் மானாவாரியாக கிடப்பதால், மின் கசிவு ஏற்பட்டால், பெரும் பிரச்னை ஏற்படும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எண்ணுார், காமராஜர் நகரில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தரைவழி மின் ஒயர் மூலமாக மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், வீடுகளில் இருந்து, மின் பெட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் ஒயர்கள், சாலையோரம் உள்ள வடிகாலில் மானாவரியாக உள்ளன.சில இடங்களில், மின் ஒயர்கள் கழிவு நீரில் மூழ்கியபடி கிடக்கின்றன. மின்கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், பெரும் ஆபத்து ஏற்படலாம் என, அப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.தவிர, மின் ஒயர்களில் பழுது ஏற்பட்டால், அவற்றை கழிவுநீரில் இருந்து எடுத்து, பழுதை நீக்க, மின் ஊழியர்களே சிரமம் மேற்கொள்கின்றனர்.ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, வடிகால் கழிவுநீரில் மூழ்கி கிடக்கும், மின் ஒயர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X