பொது செய்தி

தமிழ்நாடு

வலிப்பு நோய் குணப்படுத்த கூடியது!நரம்பியல் துறை தலைவர் பூபதி பேச்சு

Added : பிப் 11, 2020
Advertisement
 வலிப்பு நோய் குணப்படுத்த கூடியது!நரம்பியல் துறை தலைவர் பூபதி பேச்சு

சென்னை:''வலிப்பு நோய், முறையான சிகிச்சை வாயிலாக குணப்படுத்தக் கூடியது. இந்த பாதிப்பிற்கு உள்ளான நோயாளிகளை தனிமைப்படுத்தக் கூடாது,'' என, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, நரம்பியல் துறை தலைவர் ஆர்.எம்.பூபதி கூறினார்.
சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின், நரம்பியல் துறை மற்றும் இந்திய வலிப்பு நோய் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து, சென்னை நரம்பியல் கல்வி துறையின், 70வது ஆண்டு நிறைவு விழா மற்றும் உலக வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம், நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வு கூட்டத்தில், மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர், டாக்டர் ஆர்.எம்.பூபதி பேசியதாவது:வலிப்பு நோய் குறித்த மூடநம்பிக்கை, இன்றளவும் தொடர்கிறது. எனவே, வலிப்பு நோய் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வலிப்பு நோய் வராமல் தடுக்கவும், வந்த பின், அதை குணப்படுத்தவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், சிகிச்சை முறைகள் உள்ளன.வலிப்பு நோய், 10 சதவீதம், மரபணு காரணமாக வருகிறது. பெற்றோரின் வாழ்க்கை முறை மாற்றத்தால், 60 சதவீதம் குழந்தைகள், வலிப்பு நோயுடன் பிறக்கின்றன.வலிப்பு நோய், தலைகாயம், மூளைக்கு ரத்த போக்கு குறைவு, மூளை சிதைவுறல், மது, புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் ஏற்படுகிறது.மேலும், உடலில், சர்க்கரை அதிகரித்தல், குறைதல், கால்சியம், சோடியம் உள்ளிட்டவை குறைதல் வாயிலாகவும் வலிப்பு நோய் வரக்கூடும். நவீன உலகில், இரவு நேர பணி காரணமாக, வலிப்பு நோய், நீரிழிவு நோய், உடல் பருமன், மலட்டுத்தன்மை ஆகியவை ஏற்படுகின்றன.வலிப்பு நோய் குணப்படுத்தக் கூடியது. நோயாளிகளுக்கு தேவையான கவனிப்பு மற்றும் சிகிச்சை அளித்தால், அவர்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். வலிப்பு நோயாளிகளை, தனிமைப்படுத்தக் கூடாது.கருவுற்ற பெண்களுக்கு வலிப்பு நோய் இருந்தால், அது குழந்தைகளுக்கும் பரவும் என்ற நிலை இல்லை. கருவுற்ற பெண்களுக்கு, ஆரோக்கியமான உணவு முறைகள், சுகாதாரமான வாழ்வு போன்றவற்றை அளிப்பதன் வாயிலாக, குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பிரபல நரம்பியல் வல்லுனர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X