தேசிய டென்னிஸ் போட்டி

Added : பிப் 11, 2020
Advertisement
 தேசிய டென்னிஸ் போட்டி

சென்னை:பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான தேசிய டென்னிஸ் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, 'மாலை முரசு' நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன் பரிசுகளை வழங்கினார்.
அடையாறு, காந்தி நகர் கிளப் மைதானத்தில், பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான, தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி, சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில், 18 வயதிற்கு உட்பட்ட, இருபாலர் பிரிவிலும், தமிழகத்தைச் சேர்ந்த, 97 பேர் உட்பட, மொத்தம், 160 பேர் பங்கேற்றனர்.இறுதி போட்டியில், ஆண்கள் பிரிவில், கோவையைச் சேர்ந்த பூபதி சக்திவேல், பெங்களூரு வீரர், எரிக் நிகிலன் ஆகியோர் மோதினர். போட்டியில், 6 -- 1, 4 - -6, 6 -- 4 என்ற செட் கணக்கில், எரிக் நிகிலன் வெற்றி பெற்றார்.பெண்கள் பிரிவில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அகன்ஷா நிதுரோ மற்றும் வைஷ்ணவி அதுகல் ஆகியோர் மோதினர். இதில், அகன்ஷா நிதுரோ, 6 - -3, 4 -- 6, 6 -- 4 என்ற செட் கணக்கில் வென்றார்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.இது குறித்து, அவர் கூறியதாவது:இந்த கிளப், துவக்கத்தில், மாநில அளவில் மட்டுமே போட்டிகளை நடத்தியது. தற்போது, தேசிய அளவில் போட்டிகள் நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுவரை, இந்த கிளப் நடத்திய அனைத்து போட்டிகளிலும், எங்கள் பங்களிப்பு இருந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும், இது தொடர வேண்டும் என விரும்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X