மாநகராட்சிஇடம் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சிஇடம் மீட்பு

Added : பிப் 11, 2020
Share
திருவான்மியூர்:திருவான்மியூரில், ஆக்கிரமிப்பில் இருந்த, மாநகராட்சிக்கு சொந்தமான, 6,000 சதுர அடி இடம், நேற்று மீட்கப்பட்டது.அடையாறு மண்டலம், 182வது வார்டு, திருவான்மியூர், அவ்வையார் தெருவில், சாலை ஓரம், மாநகராட்சிக்கு சொந்தமான, 6,000 சதுர அடி இடம் உள்ளது.இதில், குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்து, சிலர் கடை நடத்தி வந்தனர். மீதமுள்ள பகுதியையும் ஆக்கிரமிக்க முயற்சி நடந்தது. இதனால்,
 மாநகராட்சிஇடம் மீட்பு

திருவான்மியூர்:திருவான்மியூரில், ஆக்கிரமிப்பில் இருந்த, மாநகராட்சிக்கு சொந்தமான, 6,000 சதுர அடி இடம், நேற்று மீட்கப்பட்டது.
அடையாறு மண்டலம், 182வது வார்டு, திருவான்மியூர், அவ்வையார் தெருவில், சாலை ஓரம், மாநகராட்சிக்கு சொந்தமான, 6,000 சதுர அடி இடம் உள்ளது.இதில், குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்து, சிலர் கடை நடத்தி வந்தனர். மீதமுள்ள பகுதியையும் ஆக்கிரமிக்க முயற்சி நடந்தது. இதனால், இடத்தை மீட்டு, சாலையோர பூங்கா அமைக்க, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நேற்று, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, 6,000 சதுர அடி இடத்தை, அதிகாரிகள் மீட்டனர். முதற்கட்டமாக, 10 லட்சம் ரூபாய் செலவில், சுற்றி தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.மாநகராட்சி நிதி ஒதுக்கீட்டை பொறுத்து, சாலையோர பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X