பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறுவோரை கண்டறிய, 'மூன்றாவது கண்': கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இயக்கி வைத்தார்

Added : பிப் 11, 2020
Advertisement
 விதிமீறுவோரை கண்டறிய, 'மூன்றாவது கண்':  கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இயக்கி வைத்தார்

சென்னை:'சென்னையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன பதிவு எண்களை படம் பிடித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும், அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
சென்னையில், குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், போலீசார், 2.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.அதேபோல, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், போக்குவரத்து விதிமீறல் வாகனங்களை அடையாளம் காணவும், விபத்து ஏற்படுத்தி தப்பிப்போரின் வாகனங்களை கண்டறியவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், சென்னை முழுதும், 335 சாலைகளில், 25 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.குறிப்பாக, நந்தனம், கிண்டி, திருமங்கலம் மற்றும் டைடல் பார்க் உள்ளிட்ட பகுதிகளில், 'ஆட்டோமெடிக் நம்பர் பிளேட் ரெக்ககனைசேஷன்' எனும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த கேமராக்களை, போலீசார் சுருக்கமாக, ஏ.என்.பி.ஆர்., என்று அழைக்கின்றனர்.இந்த கேமராக்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்துவிடும்.
அதன் வாயிலாக, விதிமீறலில் ஈடுபட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு, போலீசார், அபராத தொகை செலுத்துவற்கான ரசீதை, அவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைப்பர். அபராத தொகை செலுத்த தவறினால் வாகனங்களை பறிமுதல் செய்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பர்.நந்தனத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒன்பது ஏ.என்.பி.ஆர்., கேமராக்களின் இயக்கத்தை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், குற்றங்கள் குறைந்துள்ளன.சாலை விபத்துகளை ஏற்படுத்தி, தப்பித்தது தொடர்பாக, 76 சதவீத வழக்குகளில், குற்றம் செய்தோரை போலீசார் கண்டறிந்துள்ளனர்.தற்போது பொருத்தப்பட்டுள்ள, ஏ.என்.பி.ஆர்., கண்காணிப்பு கேமராக்கள், விதிமீறல் வாகன பதிவு எண்களை படம் பிடித்துவிடுவதால், இனி எவரும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு தப்பிக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X