சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமை செயலகத்தில் நுழைவு வாயில் மூடல்

Added : பிப் 11, 2020
Advertisement
 தலைமை செயலகத்தில் நுழைவு வாயில் மூடல்

சென்னை:தலைமைச் செயலகத்தில், ஏழாம் எண் நுழைவு வாயில் கேட், திடீரென மூடப்பட்டது, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைமைச் செயலகத்தில், பழைய கட்டடத்தில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், முதல்வர் அலுவலக அதிகாரிகள், தலைமைச் செயலர், உள்துறை செயலர், நிதித்துறை செயலர், சட்டத்துறை செயலர் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கு, சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்கள் அறை, செய்தித்துறை அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.சட்டசபை செயலகம், நிதித் துறை, உள்துறை, சட்டத்துறை அலுவலகங்கள், இக்கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இந்த கட்டடத்திற்கு, 10 நுழைவு வாயில்கள் உள்ளன. இவற்றில், நான்கு நுழைவு வாயில்கள் வழியே, பொதுமக்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் அனுமதிக்கப்படுவர்.
அனைத்து நுழைவு வாயில்களிலும், போலீசார், மெட்டல் டிடக்டருடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். அமைச்சர்களை சந்திக்க, முறையாக அனுமதி சீட்டு பெற்று வருவோர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.சட்டத் துறை, நிதித்துறை, உள்துறை பணியாளர்களில் பெரும்பாலானோர், ஏழாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்துவர். கதர் துறை அமைச்சர் பாஸ்கரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோரை சந்திக்க வருவோரும், இவ்வழியை பயன்படுத்துவர்.இந்த வழியில், கட்டடத்தின் உட்புறம் வரை செல்வதற்கு, படிக்கட்டுகள் எதுவும் இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில், இந்த வழியை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று திடீரென அந்த நுழைவு வாயிலை, போலீசார் மூடிவிட்டனர். அனுமதிச்சீட்டு பெறாமல் வந்த, அ.தி.மு.க.,வினரை தடுத்தபோது, அவர்கள் தகராறில் ஈடுபட்டதால், அந்த வழியை மூடிவிட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
திடீரென, ஏழாம் எண் நுழைவு வாயிலை மூடியது, அவ்வழியை பயன்படுத்தும் தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதை திறக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், நாமக்கல் மாளிகை கட்டடம் பின்புறம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது. தற்போது திடீரென, அங்கும் போலீசாரை நிறுத்தி, இரு சக்கர வாகனங்களை அனுமதிக்க மறுக்கின்றனர். இதன் காரணமாக, இரு சக்கர வாகனத்தில் வரும், தலைமைச் செயலக ஊழியர்கள், வாகனங்களை நிறுத்த இடமின்றி, கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X