சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிக்- டாக்'கில் மிரட்டியோர் பிடிபட்டனர்

Added : பிப் 11, 2020
Advertisement

பீர்க்கன்காரணை:சமூக செயலியான, 'டிக் டாக்'கில் பலரும் வீடியோக்களை பதிவிடுகின்றனர்.
இதேபோல், புது பெருங்களத்துாரைச் சேர்ந்த, இரண்டு வாலிபர்கள், தங்கள் கைகளில் கத்தியை வைத்து, கானா பாடலுக்கு ஆடும் வீடியோ ஒன்று, சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.அந்த வீடியோவில் அவர்கள், பீர்க்கன்காரணை போலீசாரை குறிப்பிட்டு, சில வார்த்தைகள் பேசியதாகவும் கூறப்படுகிறது.ஆனால், வீடியோ குறித்த முழு விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில், வீடியோ வெளியிட்டவர்களில் ஒருவர், புது பெருங்களத்துார், வேல் நகரைச் சேர்ந்த, கோவிந்தன், 18 என்பதும், அவர் தன், 17 வயது நண்பருடன் இணைந்து, விளையாட்டிற்காக வீடியோ வெளியிட்டதும் தெரிய வந்தது.கோவிந்தனை கைது செய்த போலீசார், சிறுவனை, செங்கல்பட்டு, சிறார் சீர்திருத்த மையத்தில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X