பொது செய்தி

தமிழ்நாடு

கடல்போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்த்தேக்கம்

Added : பிப் 11, 2020
Advertisement
 கடல்போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்த்தேக்கம்

திருவள்ளூர்:மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக, பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி நீர்த்தேக்கம். இங்கு, மழை நீர் மற்றும் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நீர் ஆகியவற்றை தேக்கி வைத்து, புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னை நகர மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், 2019ம் ஆண்டு பருவமழை குறைந்ததால், பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டது.மேலும், கோடையில், சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக பொதுப்பணி துறையினரின் வேண்டுகோளை ஏற்று, கடந்த ஆண்டு, ஆந்திர மாநில அரசு, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், கிருஷ்ணா நீரை அனுப்பி வைத்தது.
அந்த நீர், சாய் கங்கை கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.மேலும், வடகிழக்கு பருவ மழையாலும், பூண்டிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, பூண்டி நீர்த்தேக்கத்தில், மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், தற்போது, 1.77 டி.எம்.சி., தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சாய்கங்கை கால்வாய் வழியாக, தினமும் வினாடிக்கு, 510 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X