பொது செய்தி

தமிழ்நாடு

நெல் உற்பத்தியில் பின்னடைவு: ஆலைகள் உருமாற்றம்

Added : பிப் 11, 2020
Advertisement
 நெல் உற்பத்தியில் பின்னடைவு: ஆலைகள் உருமாற்றம்

ஆர்.கே.பேட்டை:தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உரம் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஈடுபாடு காட்டுவது இல்லை. இதனால், அரிசியை பெருமளவில், ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்வது கட்டாயம் ஆகியுள்ளது.
ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், கடந்த நுாற்றாண்டில், ஊருக்கு ஒன்றிரண்டு அரிசி ஆலைகள் இயங்கி வந்தன. பத்துக்கும் குறைவான வீடுகள் கொண்ட கிராமத்திலும், கட்டாயம் ஓர் அரிசி ஆலை இருந்தது.வீடுகளை கணக்கிடாமல், அதன் சுற்றுப்பரப்பில் பயிரிடப்படும் நெல் அளவை கருத்தில் கொண்டு, இந்த ஆலைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தன.ஆனால், 20 ஆண்டுகளில், நெல் பயிரிடும் பரப்பு வெகுவாக குறைக்கப்பட்டதால், இந்த ஆலைகள் முடங்கின. முடங்கிய ஆலைகளை இடித்து விட்டு, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் என, மாற்றி அமைத்து விட்டனர்.மேலும், நெல் அவிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும், ஆங்காங்கே புகார்கள் எழுந்தன.இதெல்லாம் முக்கிய காரணம் அல்ல; பாசன வசதி குறைவு, உரம் விலை உயர்வு உள்ளிட்டவற்றால், நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.அரவைக்கு நெல் வராததால், ஆலைகளை இழுத்து மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதே பிரதான காரணம்.வாய்க்கால் பாசனம் கைவிடப்பட்டு, சிக்கனமாக மேற்கொள்ளப்படும் சொட்டு நீர் பாசனத்தில், நெல் பயிரிட முடியாது.நெல் வயலில், எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டும்.
குடிநீருக்கே தவிக்கும் நிலையில், வயலில் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்துவது சாத்தியமில்லை. ஆனாலும், வாய்க்கால் பாசனத்திற்கு மாற்றாக, வயலில் குழாய்களைப் பதித்து, தண்ணீரை ஓரளவிற்கு சிக்கனமாக பயன்படுத்தி, நெல் பயிரிடும் விவசாயிகள் ஒரு சிலர் உள்ளனர்.உள்ளூர் மக்களின் அரிசி தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, நெல் சந்தைக்கு வருவது இல்லை. இதனால், அரிசி வியாபாரிகள், 20 ஆண்டுகளாக, ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அரிசியை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.அரிசி ஆலை அதிபர்கள்பெரும்பாலானோர், தற்போது, அரிசிக்கடை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X