பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்தை ஆக்கிரமித்த நரிக்குறவர்கள் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

Added : பிப் 11, 2020
Advertisement

பெரியகுப்பம்:பெரியகுப்பம் மேம்பாலத்தின் கீழ், நரிக்குறவர்கள் ஆக்கிரமித்து உள்ளதால், துர்நாற்றம் வீசுவதாகவும், அவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர் - மணவாள நகர் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில், பாலத்தின் அடியில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.பாலத்தின் அருகிலேயே இறைச்சி சமைக்கின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், மேம்பாலத்தின் அடிபகுதியில் சிலர், காலை முதல், இரவு வரை மதுபானங்களை அருந்துகின்றனர். இதனால், அவ்வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர்.எனவே, நரிக்குறவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மாற்று இடம் வழங்கி, அங்கு அவர்களை தங்க வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X