பொது செய்தி

தமிழ்நாடு

புதர் மண்டி கிடக்கும் ஒன்றிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

Added : பிப் 11, 2020
Advertisement
 புதர் மண்டி கிடக்கும் ஒன்றிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சியில், கற்கள் பெயர்ந்து புதர் மண்டி கிடக்கும் ஒன்றிய சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஊராட்சியிலிருந்து, ரயில் நிலைய புக்கிங் ஆபிஸ், ஏரிக்கரை வழியாக, கூவம் ஆற்றைக் கடந்து, அதிகத்துார் வழியாக,மணவாள நகர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி, 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மணவாள நகர் சென்று வருகின்றனர்.இந்த ஒன்றிய சாலையில், கடம்பத்துார் ஏரி அருகே உள்ள சாலை கற்கள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
மேலும், சாலையின் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டிக் காணப்படுகின்றன. இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், சாலையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது இருசக்கர வாகன ஓட்டிகள்சாலையோரம் புதர் மண்டிக் கிடப்பதால், கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், ஒன்றிய சாலையை சீரமைக்கவும், முட்புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X