பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் குப்பை கொட்டினால் அபராதம்

Added : பிப் 11, 2020
Advertisement

திருத்தணி:திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை, சாலையில் கொட்டினால், 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என, ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் சாலை, சன்னிதி தெரு, சித்துார் சாலை, ம.பொ.சி.சாலை, பைபாஸ் சாலை, ஆறுமுக சுவாமி கோவில் தெரு மற்றும் மேட்டுத் தெரு ஆகிய இடங்களில், 70க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன.இந்த மண்டப உரிமையாளர்கள், திருமணம், காதணி விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும் போது, உணவு கழிவுகள் மற்றும் வாழை இலை போன்ற கழிவுகளை, மண்டபம் அருகே சாலையோரம் கொட்டுகின்றனர்.திருமண மண்டபத்தில் வெளியேறும் கழிவுகள், மக்கும், மக்கா குப்பை என, தனித்தனியாக பிரித்து, உரம் தயாரித்துக் கொள்ள வேண்டும் என, மண்டப உரிமையாளர்களை, நகராட்சி ஆணையர் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இருப்பினும், சில திருமண மண்டப உரிமையாளர்கள், இன்றும், கழிவு களை சாலையோரம் கொட்டி வருகின்றனர்.இது குறித்து நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி கூறியதாவது:நகராட்சியில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், தங்களது திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை தரம் பிரித்து உரம் தயாரித்துக் கொள்ள வேண்டும்.நகராட்சி நிர்வாகம் குப்பை எடுக்காது என, பலமுறை எச்சரித்தும் சாலையில் கொட்டி வருகின்றனர்.இனிவரும் நாட்களில், திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை சாலையில் கொட்டினால், அந்த மண்டப உரிமையாளர்களிடம் இருந்து, 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X