சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் வாலிபர் பலி

Added : பிப் 11, 2020
Advertisement

மப்பேடு: மப்பேடு, கே.கே.நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் நந்தகுமார், 25. இவர், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.பின், நேற்று அதிகாலை, இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். தண்டலம் - - அரக்கோணம் நெடுஞ்சாலையில், விஸ்வநாதகுப்பம் அருகே வந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மப்பேடு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவியை காணவில்லை
வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, வயலாநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் சிநேகா, 18. இவர், கடந்த, 8ம் தேதி, கல்லுாரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், பின் வீடு திரும்பவில்லை.இவரை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, வெள்ளவேடு போலீசில், சிநேகாவின் தாயார் சசிகலா அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X