சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

Added : பிப் 11, 2020
Advertisement

நரசிங்கபுரம்:நரசிங்கபுரம் அருகே, குட்டையில் மூழ்கி, சிறுவன் இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நரசிங்கபுரம் அடுத்த, சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் கவுதம், 7. குமார், மனைவி மற்றும் மகனோடு நரசிங்கபுரம் -- செல்லம்பட்டறை செல்லும் சாலையில் உள்ள நிலத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வியாபாரம் நடைபெறும் இடத்திற்கு வந்த கவுதம், வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றான். மாலையில், குமார் வீடு திரும்பிய போது, மகன் வீட்டில் இல்லாததை கண்டார். பல இடங்களில் தேடியும் கவுதம் கிடைக்கவில்லை.இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் போலீசில், குமார் அளித்த புகாரையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கவதம், நரசிங்கபுரம் -- செல்லம்பட்டறை செல்லும் சாலையோரம் உள்ள குட்டை தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.இதையடுத்து, சுங்குவார்சத்திரம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில், மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X