சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் டயரில் சிக்கிய பெண் பலி

Added : பிப் 11, 2020
Advertisement

கும்மிடிப்பூண்டி:அரசு பஸ்சின் பின் டயரில் சிக்கி, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் இறந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த, தேவம்பட்டு அருகே, அகரம் கிராமத்தில் வசித்தவர் பன்னீர் மனைவி மஹாலட்சுமி, 48. நேற்று மதியம், கணவருடன், கும்மிடிப்பூண்டி நோக்கி பஜாஜ் சிடி 100 இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.தேவம்பட்டு திருப்பத்தில், எதிரே வந்த, அரசு பஸ், தடம் எண்: 90 கே, மீது மோதாமல் இருக்க, சாலையை விட்டு இறங்கும்போது, இருசக்கர வாகனம் தடுமாறியதில், கணவன், மனைவி இருவரும் விழுந்தனர்.பஸ்சின் பின்புற டயரில் மஹாலட்சுமி சிக்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். கனவர் உயிர் தப்பினார். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X