திட்டங்கள் குறித்து புதியஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திட்டங்கள் குறித்து புதியஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை

Added : பிப் 11, 2020
Share
 திட்டங்கள் குறித்து புதியஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன், திட்டங்கள் குறித்து ஆலேசானை கூட்டம் நடந்தது.கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 43 ஊராட்சி மன்ற தலைவர்களுடன், முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய அலுவலர்கள் ராம்குமார், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை தாங்கினார். அதை தொடர்ந்து, ஒன்றிய அலுவலர் லதா, ஊராட்சியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X