சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலி தொழிலாளி தற்கொலை

Added : பிப் 11, 2020
Share
Advertisement

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் வினோத், 29. கூலித் தொழிலாளி. இவர், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த, 29ம் தேதி மனமுடைந்த வினோத், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடல்மேல் ஊற்றி, தீவைத்துக் கொண்டார்.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் இறந்தார்.
மணல் கடத்தியவருக்கு,'காப்பு'
திருவாலங்காடு: திருவாலங்காடு அடுத்த, ஒரத்துார் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து, மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருவாலங்காடு போலீசார், மேற்கண்ட ஆற்றில், நேற்று மாலை, சோதனை செய்தனர். அப்போது, அரசு அனுமதியின்றி, மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த குப்பன், 50, என்பவரை, போலீசார் கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X