சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

Added : பிப் 11, 2020
Advertisement
 8 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

கீழச்சேரி:கீழச்சேரியில் நடந்த தீ விபத்தில் எட்டு குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அருந்ததிபுரத்தில், 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.இங்குள்ள பாலாஜி என்பவர் வீட்டில், சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில், குடிசை வீடு தீயில் எரிந்தது.இதையடுத்து, அருகில் இருந்த ஏழு வீடுகளில், தீ மளமளவென எரிந்து குடிசை வீடுகள் நாசமாகின.இதில், வீடுகளிலிருந்த கட்டில், பீரோ, 'டிவி' போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், பைக் உட்பட பொருட்கள், தீயில் எரிந்து நாசமாகின. மேலும், எட்டு சிலிண்டர்களும் தீயில் எரிந்து நாசமாகின.மப்பேடு போலீசார், பேரம்பாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.துணை தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில், வருவாய்த் துறையினர், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அங்கன்வாடி மையம் உட்பட, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, ஊராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டனர்.இப்பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன், தீ விபத்தில், 10 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.மேலும், பாதுகாப்பான இடம் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X