சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் கடத்தி வரப்பட்ட 46கிலோ கஞ்சா பறிமுதல்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

திருவள்ளூர்:ஆந்திராவில் இருந்து, ரயிலில் கடத்தி வரப்பட்ட, 46 கிலோ கஞ்சாவை, போதை பொருள் ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில், மூட்டைகளுடன் நின்று கொண்டிருப்பதாக, காஞ்சிபுரம் மாவட்ட போதைப் பொருள் ஒழிப்பு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.இதையடுத்து, டி.எஸ்.பி., மீனாட்சி உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் பிரபாகர், நேற்று, திருவள்ளூர் வந்து, மூட்டை மற்றும் பைகளுடன் நின்றவர்களிடம் விசாரித்தனர்.விசாரணையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த குருநாதன், 30, ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தைச் சேர்ந்த குஞ்சா லோவராஜு, 29, என்பதும், இருவரும், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயிலில், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, ௭ லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X