இளையான்குடி:இளையான்குடி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம் ஒன்றிய தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது.
துணை தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் பர்னபாஸ் அந்தோணி, ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,நாகராஜன், நகரகுடி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன், மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையாளராக வந்திருந்தனர்.
விவாதம்
கீர்த்தனா (அ.தி.மு.க.,): திருவள்ளூர், மேலாயூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. விஜயன்குடி - மருதங்கநல்லுார் இடையே மேம்பாலம் கட்ட வேண்டும்.பி.டி.ஓ., பர்னபாஸ் அந்தோணி: குடிநீர் பிரச்னை தீர்க்கவும், மேம்பாலம் கட்ட பொது நிதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனலட்சுமி, துணை தலைவர் (அ.தி.மு.க.,): காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
முருகானந்தம் (தி.மு.க.,): துகவூர் கண்மாயில் இருந்து தோக்கனேந்தல் கால்வாயில் பாலம் கட்ட பொதுப்பணித்துறை அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.ஓ.,: பொதுப்பணித்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்படும்.
முருகன் (அ.தி.மு.க.,): இக்கூட்டத்தில் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றால் மட்டுமே, மக்கள் குறைகளை உடனே தீர்க்க முடியும். வாணி கிராமத்தில் இரவில் காவிரி குடிநீரை திறந்துவிடுவதால், விரயமாகிறது.
பி.டி.ஓ.,: அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பிவிட்டோம். அடுத்த கூட்டத்தில் பங்கேற்க செய்வோம்.
சீமைச்சாமி (அ.தி.மு.க.,): முனைவென்றி பகுதியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் முறையாக செயல்படுவது கிடையாது.
முனியாண்டி, தலைவர் (அ.தி.மு.க.,): இளையான்குடி பகுதியில் காவிரி திட்டத்தில் 5 அதிகாரிகள் மட்டும் பணியாற்றுகின்றனர். மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால், குடிநீர் வினியோகம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE