பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் சந்திப்பு மையமாகும் பிள்ளையார்பட்டி

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்தப்படும் மையமாக மாறி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தின் பிரபலமான ஆன்மீகத் தலமாக பிள்ளையார்பட்டி உள்ளது. இங்குள்ளகற்பகவிநாயகர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி.,க்கள் முதல் சாதாரண மக்கள் முக்கிய தினங்களிலும், விடுமுறை நாட்களிலும் வருகின்றனர்.இந்நிலையில் சுவாமி தரிசனம் மட்டுமின்றி பல வித சந்திப்புக்களுக்கும் பலரும் பிள்ளையார்பட்டியை தேர்வு செய்ய துவங்கியுள்ளனர்.மணிவிழா, திருமண விழா, பிறந்தநாள் விழாக்களும், பல்வேறு அமைப்புகளின் பொதுக்குழு, நிர்வாகக் குழு கூட்டங்களுக்கும் பலரும் இந்த ஆன்மிக தலத்தை தேர்வு செய்கின்றனர். விநாயகரை தரிசிக்க வரும் ஆவலில் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அதிகம் வருகின்றனர். சிறிய அரங்கம் முதல் மண்டபங்கள், சமையல் குழுவினர் மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ளதால், இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்றஇடமாக உள்ளன. இதனால், பிள்ளையார்பட்டி மக்கள் சந்திப்பு மையமாக மாறி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X