பொது செய்தி

தமிழ்நாடு

வசூல்! சிவகங்கை அரசு மருத்துவமனையில்....ஸ்கேன், எக்ஸ்ரே ரிசல்ட் பெற்றுத்தர

Added : பிப் 11, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'தட்கல்' முறையில் சி.டி., மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன், எக்ஸ்ரே ரிசல்ட்களை பெற, தற்காலிக ஊழியர்கள் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துஉள்ளது.
இங்கு, உள்நோயாளிகள், வெளி நோயாளிகளாக வருபவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைப்படி சி.டி., மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. தனியார் பங்களிப்பில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதற்காக குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்கின்றனர். ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி., ரிசல்ட்களை உடனுக்குடன் வழங்க, போதிய டாக்டர்கள், ரேடியாலஜிஸ்ட் இல்லை. இதனால், இங்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்த நாளில் இருந்து 3 முதல் 4 நாட்களுக்கு பின்னரே ரிசல்ட் வழங்குவர். இதை வைத்தே உள், வெளிநோயாளிகளுக்கு டாக்டர்கள் மேல் சிகிச்சையை துவக்குவர். சில நோயாளிகள் உடனுக்குடன் ஸ்கேன், எக்ஸ்ரே முடிவுகளை வழங்குமாறு கேட்கின்றனர். ஆனால், டாக்டர்கள் பற்றாக்குறையால் முடிவுகளை வழங்குவதில் காலதாமதம் செய்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காண்ட்ராக்ட் அடிப்படையில் மருத்துவமனையில் ஸ்கேன், இ.சி.ஜி., எக்ஸ்ரே சென்டர்கள் உள்ள பகுதியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள், நோயாளிகளிடம் உடனுக்குடன் முடிவுகளை வாங்கி தருவதாக கூறி, கட்டாய வசூல் செய்கின்றனர்.
அதிக பட்சமாக தற்காலிக ஊழியர்கள் ஒரு ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி., முடிவுகளை பெற்று தர அதிக பட்சம் ரூ.300 வரை கட்டாய வசூல் செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு இங்கு 100 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. ஸ்கேன் சென்டர்களில் கட்டாய வசூலில் ஈடுபடும் தற்காலிக ஊழியர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X