பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்பது ஆண்டாக பூட்டியே கிடக்கும் கிராம நுாலகம்

Added : பிப் 11, 2020
Advertisement
 ஒன்பது ஆண்டாக பூட்டியே கிடக்கும் கிராம நுாலகம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டியில் 3.75 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம், 9 ஆண்டுகள் கடந்தும் திறக்கப்படாததால் மக்கள் வரிப்பணம் விரயமாகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலமாக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2010 -- 2011 ம் ஆண்டில் 3.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நூலக கட்டடம் கட்டப்பட்டது. கட்டிடப் பணிகள் முடிந்ததும், மின்சாரப்பணிகள், நூலகத்துக்கான உள்ள கட்டமைப்பு பணி முடிக்கப்பட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இப்பணிகள் அனைத்தும் முடிந்து 9 ஆண்டுகளான நிலையில், நூலகம் இன்று வரை பூட்டியே கிடக்கிறது. சிங்கம்புணரி ஒன்றியங்களில் நூலக பணியாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான நூலகங்கள் மூடியே கிடக்கின்றன. இதனால் நூலக கட்டடம் பழுதாகி வருகிறது. சில இடங்களில் சமூக விரோத கும்பல்களில் கூடாரமாகவும் நூலகங்கள் மாறியுள்ளன. வாசகர்கள் பலமுறை புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அறிவை வளர்க்கும் இடமான நுாலகம், மதுபார்களாக மாறிவருகின்றன. எனவே நுாலகத்திற்கு உரிய ஊழியர்களையும், புத்தகங்களையும் வழங்கி, நுாலகத்தை செயல்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X