பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பவுர்ணமி வெளிச்சமே தெருவிளக்கு

Added : பிப் 11, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் எரியாததால் இரவில்அவ்வழியே செல்லும் ஊழியர்கள், மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
இவ்வளாகத்தில் கலெக்டர், எஸ்.பி., மற்றும் பிற அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த வளாகத்தை சுற்றிலும் தெருவிளக்குகள் பொருத்தியுள்ளனர். இத்தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியவே இல்லை. பவுர்ணமி நாட்களில் நிலவொளியில் அரசு ஊழியர், பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதே நேரம் அமாவாசை இருட்டில் விஷச்சந்துக்களின் அச்சத்தில் நடமாடவே முடியாத அளவிற்கு, கலெக்டர் அலுவலக வளாகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாவட்ட அளவில் குடிநீர், தெருவிளக்கு பிரச்னைகளை தீர்க்க கோரி, திங்கள் தோறும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வருகின்றனர். ஆனால், மக்கள் பிரச்னையை தீர்க்க வேண்டிய மாவட்ட அதிகாரிகள் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் தெருவிளக்கு எரியாமல், இருளில் சூழ்ந்துள்ளது ஊழியர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X