தமிழ்நாடு

பெண்களுக்கு உதவ மாட்டேன்கிறாயே சகியே...! சகி உதவி மைய நிர்வாகிகள் 'பிசியோ பிசி!'

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 பெண்களுக்கு உதவ மாட்டேன்கிறாயே சகியே...! சகி உதவி மைய நிர்வாகிகள் 'பிசியோ பிசி!'

கோவை:பல்வேறு வன்கொடுமைகளில் சிக்கும் பெண்களுக்கு, ஆறுதல் அளித்து உதவ, அரசு சார்பில், சகி உதவி மையம் செயல்படுகிறது. ஆனால், அவசர தேவைகளுக்கு இம்மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொண்டால், உதவிக்கரம் நீட்ட ஊழியர்கள் எவரும் அங்கிருப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
வன்கொடுமைகளில் இருந்து மீளும் பெண்களுக்கு உதவும் வகையில், சமூக நலத்துறையின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும், 'சகி உதவி மையம்' இயங்குகிறது.கோவையில், பூமார்க்கெட் பகுதியில், பெண் நிர்வாகி தலைமையில், 24 மணி நேரமும் சகி உதவி மையம் செயல்படுகிறது.இங்கு, புகார் அடிப்படையில் உடனடி மீட்பு நடவடிக்கைகள், உணவு, தற்காலிக தங்கும் விடுதி மற்றும் போலீஸ், சட்டம், மருத்துவம், உளவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஆட்பற்றாக்குறை காரணமாக, கடந்த ஒரு மாதமாக, பிரச்னைகளுடன் உதவி மையத்தை தொடர்பு கொள்ளும் பெண்களுக்கு, சரியான சேவை வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.நேரில் சென்றாலும், அலுவலகம் பெரும்பாலும் பூட்டியிருப்பதாக, பெண்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தன்னார்வலர் ஒருவர் கூறியதாவது:சகி பெண்கள் உதவி மையத்தில், மைய நிர்வாகி, வழக்குகளை நிர்வகிக்க இருவர், உளவியல் ஆலோசகர், ஐ.டி., அலுவலர், பன்முக பணியாளர் மற்றும் காவலாளி என ஏழு பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், காவலாளி தவிர, மைய நிர்வாகி மற்றும் ஐடி அலுவலர், உளவியல் ஆலோசகர் என மூன்று பேர் மட்டுமே உள்ளனர்.ஒரு மாதத்துக்கு, 10 நாட்களே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று விதிமுறை இருக்கும்போது, மாதம் 30 நாட்களும், சமூக நலத்துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு முகாமுக்கு சென்று விடுகின்றனர்; அல்லது, முகாமுக்கு செல்வதாக கூறிக்கொள்கின்றனர்.
பெரும்பாலும் உதவி மையம் பூட்டியே உள்ளது. ஒரு நாளைக்கு, 25 - 30 புகார்கள் வருவதாக கலெக்டர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.போன் எண்களை பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பிற்பாடு போனில் மட்டும் வழிகாட்டல்கள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இதனால் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில்லை என்பதால், உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் தற்கொலை உள்ளிட்ட முடிவுகளில் இருந்து, பாதிக்கப்பட்ட பெண்களால் மீள முடிவதில்லை.குடும்ப வன்கொடுமைகளிலிருந்து மீள, ஏராளமானோர் உதவி மையத்தை நாடும் நிலையில், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
சகி உதவி மைய ஊழியர்கள் சிலர், பணி நேரத்தில் அலட்சியமாக இருப்பதாகவும், தங்கள் சொந்த பணிகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு பணிகள், கலெக்டர் அலுவலக உதவி மைய பணி என சுழற்சி முறையில், பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இருப்பினும், சகி உதவி மையத்தில் ஒரு பணியாளர் எந்நேரமும் இருந்து, போன் அழைப்புகளை, 'அட்டெண்ட்' செய்து, தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.-
தங்கமணிசமூக நலத்துறை அலுவலர் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பிற்பாடு போனில் மட்டும் வழிகாட்டல்கள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதனால் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில்லை என்பதால், உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் தற்கொலை உள்ளிட்ட முடிவுகளில் இருந்து, பாதிக்கப்பட்ட பெண்களால் மீள முடிவதில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-202015:10:02 IST Report Abuse
Sujatha Sathyanarayanan government can implement many welfare programs, if the staff doesnt cooperate all will going in drain. thus the employee must work with dedication, thinking they can save life.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X