பொது செய்தி

தமிழ்நாடு

பாதிப்பு!பி.எஸ்.என்.எல். , சேவைகள்....இரண்டு மாத சம்பளம் 'கட்'

Added : பிப் 11, 2020
Advertisement

பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடுமையான நஷ்டத்தில் இயங்கியதை தொடர்ந்து, பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் 92 ஆயிரம் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர்.
தமிழகத்தில் மட்டும் 6000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். பணியில் இருப்பவர்களுக்கு கடந்த டிச., ஜன., மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அத்துடன் விருப்ப ஓய்வு பெற்று சென்றவர்களுக்கும் டிச., ஜன., மாத சம்பளம் வழங்காமல் அனுப்பி வைத்துள்ளனர். விருப்ப ஓய்வில் சென்ற தொலை தொடர்பு ஊழியர் ஒருவர் கூறியதாவது:அனைத்து ஊழியர்களுக்கும் கடந்த ஆண்டு முதல் மாத சம்பளம் மிக தாமதமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை, என்றார். விருப்ப ஓய்வில் சென்றவர்களில் பெரும்பாலானோர் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், தற்போது பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.3 ஜி அலைபேசி சிம்கார்டு உள்ள வாடிக்கையாளர்கள் அதை 4 ஜி முறைக்கு மாற்றுவதற்கு வந்தால், அச்சேவையை உடனுக்குடன் வழங்குவதற்கான வசதி இருந்தும் பணியாளர்கள் இல்லாததால் தாமதமாகிறது.தொலைத்தொடர்பு அதிகாரிகள் கூறுகையில், தற்போது விருப்ப ஓய்வில் சென்றவர்களால் பணியில் சிறிது தொய்வு நிலை உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்நிலை விரைவில் சீராகும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X