பொது செய்தி

தமிழ்நாடு

அதுவா... நட்டு விழுந்திருக்கும்! இருசக்கர நிறுவனத்துக்கு 'குட்டு'

Added : பிப் 11, 2020
Advertisement

கோவை:கோவை, ஆலாந்துறை அருகேயுள்ள சென்னனுாரை சேர்ந்த திவ்யா, கோவை அவிநாசி சாலையிலுள்ள சுசூகி பைக் ஏஜன்சியில், 2016, பிப்., 25ல் ஸ்கூட்டர் வாங்கினார்.இரண்டு மாதத்துக்கு பிறகு, ஸ்கூட்டரை சர்வீசுக்கு விட்டார். சர்வீஸ் செய்த பிறகு, மே 11ல், ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற போது, பின்புற டயர் கழன்று விழுந்தது. இதில், திவ்யா துாக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இரண்டு சக்கர வாகன நிறுவனத்தில், புகார் அளித்தார். அப்போது, அவர்கள் ஸ்கூட்டர் சக்கரத்தின் நட்டு, சரியாக 'டைட்' வைக்காததால், கழன்று விட்டதாக தெரிவித்தனர்.இதனால் ஏற்பட்ட காயத்துக்கு, இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், ஸ்கூட்டர் சக்கரம் கழன்று விழுந்து காயம்பட்டதற்கு, 10,000 ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு, 3,000 ரூபாய் வழங்க, சூசுகி பைக் ஏஜன்சிக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X