கரும்பு கடையில் ததும்பி நிற்கிறது சாக்கடை கழிவு

Added : பிப் 11, 2020
Advertisement

நடைபாதை ஆக்கிரமிப்புராமநாதபுரம் பங்கஜா மில் சாலையிலுள்ள பஸ் ஸ்டாப் அருகில், நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.ரவி, ராமநாதபுரம்.

அகற்றப்படுமா மண்மேடுபோத்தனுார் ரயில்வே மேம்பாலத்தின் வடக்கு பகுதியிலுள்ள இறங்குதளத்தை ஒட்டி, மேற்கு பகுதியில், பாதசாரிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதைக்கு அருகே மண்மேடு, அகற்றப்படாமல் உள்ளது.சுரேஷ், போத்தனுார்

விபத்தில் சிக்கும் வாகனங்கள்ராஜவீதி பைவ் கார்னரிலிருந்து, மணிக்கண்டு வரையிலான சாலையில் ஏராளமான குழிகள் இருப்பதால், இரு சக்கர வாகனங்களும், கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.ரவிக்குமார், ராஜவீதி.

குப்பை குவியல்மாதம்பட்டியை அடுத்த குப்பனுார் கிரீன் கார்டன் பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகே குப்பை குவியலாக கொட்டி எரிக்கப்படுகிறது.சுமி, குப்பனுார்

கொசுக்கள் ராஜ்யம்காந்திபுரம் சுற்றுவட்டார பகுதியில், மாநகராட்சி சார்பில் மாலை நேரத்தில் கொசு மருந்து அடித்து பல மாதங்களாகி விட்டது. இங்கு கொசுக்கள் அதிகம்.பழனிசாமி, காந்திபுரம்

மின் விளக்கு இல்லைவெள்ளக்கிணர் ஹவுசிங்யூனிட் பேஸ்-2 பகுதியிலுள்ள பஸ் டெர்மினல் வடக்கு பகுதியில், போதுமான மின் விளக்குகள் இல்லை.ஜோசப்ராஜ், வெள்ளக்கிணறு

வீணாகும் குடிநீர்ரத்தினபுரி லட்சுமிபுரத்தில், குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்டு, பாதியில் பணிகளை கைவிட்டதால், குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடுகிறது.ஆனந்த். ரத்தினபுரி

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புஒண்டிப்புதுார் எம்.ஜி.ஆர்.நகர், 60வது வார்டில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதை அப்புறப்படுத்தினால், போக்குவரத்து எளிதாகும்.முருகன், ஒண்டிப்புதுார்.

கொஞ்சம் கொசு மருந்து அடிங்கமாநகராட்சி, 39வது வார்டுக்குட்பட்ட, பீளமேடு, ஏ.டி.காலனியில், சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்தப்படுவதில்லை; கொசுமருந்தும் அடிப்பதில்லை.மதன்நிர்மலா, பீளமேடு.

நிரம்பி வழியும் கழிவுகள்கரும்புக்கடை, சாரமேடு வள்ளல் நகர் பகுதியில் சாலையின் ஒரு பகுதியிலுள்ள சாக்கடை கால்வாய், கழிவுகளால் நிரம்பி வழிகிறது.சாதிக் சர்புதீன், சாரமேடு.

போக்குவரத்து சீராகுமா?கோவை - சிறுவாணி சாலையில், மாதம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.ராமச்சந்திரன், குப்பனுார்.

குப்பை குவியல்ராமநாதபுரம் 80 அடி சர்ச் சாலையோரம், மாநகராட்சி குப்பைத்தொட்டி நிறைந்து, சாலையோரம் குப்பை பரவிக்கிடக்கிறது.ரவிக்குமார், ராமநாதபுரம்

குவியும் குப்பைபீளமேடு பாரதிகாலனி சூரியா கார்டன் பிரதான சாலையில், 'குப்பை கொட்டாதீர்' என்று அறிவிப்பு வைத்திருந்தும், குப்பை குவிந்து கிடக்கிறது.உதயகுமார்,சூரியா கார்டன்.

பகலில் எரியும் விளக்குகண்ணப்பன் நகர் புறநகர் போலீஸ் ஸ்டேஷன் ஜங்ஷனில் பகலிலேயே தெருவிளக்குகள் எரிகின்றன.ஆனந்த கிருஷ்ணன், வெள்ளக்கிணறு.

மூடப்படாத குழிகாந்திபுரம் நுாறடி சாலையில், சாக்கடை கால்வாயை சீரமைக்க தோண்டப்பட்ட குழி, இனியும் மூடப்படவில்லை. பல மாதங்களாக அப்படியே கிடக்கிறது.மணி, நுாறடி சாலை

அகற்றப்படுமா டீ கடைகோவை ராஜவீதி, பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகம், சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக டீக்கடை நடத்தப்படுகிறது.பிரகாஷ், ராஜவீதி.

சுற்றித்திரியும் மாடுகள்திருச்சி சாலை சுங்கத்திலிருந்து வாலாங்குளம் செல்லும் சாலையில், கால்களுக்கு கயிறு கட்டாத மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.ராம்கி, சுங்கம்

தடுப்பு உடைந்ததால் விபத்துசெங்கப்பள்ளி - வாளையார் தேசிய நெடுஞ்சாலை, நவக்கரை பகுதியில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் வாகனங்கள் மோதி இடிந்து விட்டது. விபத்து தொடர்கிறது.வேலுசாமி, நவக்கரை.

சீராகுமா சாலைசாய்பாபா காலனி சர்ச் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.தெய்வசிகாமணி, சாய்பாபாகாலனி.

சாலையை சீரமைக்கனும்தடாகம் சாலையிலிருந்து சொக்கம்புதுார் செல்லும் முத்தண்ணன் குளம் சாலை சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை செப்பனிட வேண்டும்.ரவிக்குமார், சொக்கம்புதுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X