மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதியில் உள்ள சாக்கடை கால்வாயில், வீடுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய் குழாய்களில் இருந்து, மனிதக்கழிவு திறந்து விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, பலருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் ஏற்படுகிறது. மதுக்கரை பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதில் பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு, இந்த சுகாதார பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.-அருண், மதுக்கரை
வாகன ஓட்டிகள் அவதிகோவைப்புதுாரிலுள்ள சாந்தி ஆசிரமத்திலிருந்து, பரிபூர்ணா எஸ்டேட் செல்லும் பாதை முக்கிய சாலையாகும். இவ்வழியே பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இவ்வழியாக கோவிலுக்கும், சர்ச்சுக்கும், பள்ளிவாசலுக்கும் செல்லலாம். பாதாள சாக்கடைப்பணிகளை மேற்கொண்ட பின், பெரும்பாலான சாலை சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இச்சாலை மட்டும் அப்படியே விடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பிரபாகரன், கோவைப்புதுார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE