பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்

Added : பிப் 11, 2020
Advertisement
 அங்கன்வாடி ஊழியர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்

ராமநாதபுரம்:தமிழக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் உமாராணி தலைமை வகித்தார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலர் நஜ்முதின், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட துணை தலைவர் முனிஸ்பிரபு முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில பொதுச்செயலர் முருகேஸ்வரி பேசினார்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவேண்டும். அங்கன்வாடி பணியாளர்களை முழுமையாக சுகாதாரத் துறையின் பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 2,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்படவேண்டும். கூடுதல் பொறுப்பு பணிக்கான பொறுப்புபடி 600ல் இருந்து2000 ரூபாயாகஉயர்த்தவேண்டும்உள்ளிட்டதீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது. புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்படி மாநில தலைவராக கல்யாணி, பொதுச்செயலாளராக மல்லிகா, பொருளாளர் வெள்ளைத்தாய், மாநில இணைச்செயலர் அவ்வையார், துணைத் தலைவர் தனலெட்சுமி ஆகியோரும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக கிரிஜா, கீதா, சசிகலா, ஜொஹாரா பாத்திமா தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X