பொது செய்தி

தமிழ்நாடு

மனுக்கள் எழுதிய அரசு ஊழியர்கள் 

Added : பிப் 11, 2020
Advertisement
 மனுக்கள் எழுதிய  அரசு ஊழியர்கள் 

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு புகார் அளிக்க வரும் மக்களுக்கு கலெக்டர் உத்தரவின் பேரில் அரசு ஊழியர்கள் இலவசமாக மனுக்கள் எழுதி கொடுத்தனர்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் அளிப்பதற்காக கிராமங்களில் இருந்து எழுத, படிக்க தெரியாத மக்கள் அதிகம் வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் சார்பில் மனுக்கள் எழுதி தரப்பட்டது. இதில் பணம் வாங்கி மனு எழுதுவதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு மனு எழுதுவதற்காக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் துறை, கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு துறையில் இருந்தும் இரு ஊழியர்கள் திங்கட் கிழமை மனு நீதி நாளில் மனு கொடுக்க வரும் மக்களுக்கு இலவசமாக மனு ஏழுதி தர வேண்டும், என கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.இதன்படி நேற்று முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு அரசுத் துறை ஊழியர்கள் இலவசமாக மனு எழுதிக் கொடுத்தனர். இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X